பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

355


“முடியுமென்று தோன்றினால், நாம் நிச்சயம் அவர்கள் தப்பியோடுவற்கு வழிசெய்ய வேண்டியதுதான். சந்தேகமே வேண்டாம்” என்றான் அவன். “ஆனால் முதல் முதலாக நாம் ஒரு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டும். சிறையிலுள்ள நமது தோழர்கள் இதை விரும்புவார்களா என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டாமா?”

சாஷா தன் தலையைத் தொங்கவிட்டாள்.

சோபியா ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள்; தளது சகோதரனை லேசாகப் பார்த்துக்கொண்டே. அவள் தீக்குச்சியை ஒரு மூலையில் விட்டெறிந்தாள்.

“அவர்கள் எப்படி இதை விரும்பாமல் இருப்பார்கள்” என்று பெருமூச்செறிந்தாள் தாய். “இது எப்படிச் சாத்தியம் என்பதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.” அந்தக் காரியத்தை வெற்றிகரமாக எப்படி நடத்தமுடியும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்த் துடித்தாள் தாய். ஆனால் அவர்களோ வாய் பேசாது மௌனமாயிருந்தார்கள்.

“நான் நிகலாய் வெஸோவ்ஷிகோவைப் பார்க்கவேண்டும்” என்றாள் சோபியா.

“அவனை எங்கு எப்போது சந்திக்க இயலும் என்பதை நான் உங்களுக்கு நாளைக்குச் சொல்கிறேன்” என்றாள் சாஷா.

“அவன் என்ன செய்யப் போகிறான்?” என்று அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே கேட்டாள் சோபியா.

“அவனை அவர்கள் புதிய அச்சகத்திலே அச்சுக்கோப்பவனாக் வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள், அதுவரையிலும் அவன் அந்த ஷிகாரியோடு குடியிருப்பான்,”

சாஷா தன் முகத்தைச் சுழித்தாள், அவள் முகத்தில் மீண்டும் அந்த அழுத்தபாவம் குடியேறியது. அவள் எரிந்துவிழுந்து பேசினாள்.

“நாளை மறுநாள் நீங்கள் பாவெலைப் பார்க்கச் செல்லும்போது அவனிடம் ஒரு சீட்டுக் கொடுத்துவிட்டு வரவேண்டும்” என்று தாயை நோக்கிக் கூறிக்கொண்டே, நிகலாய் பண்ட பாத்திரங்களை விளக்கும் இடத்துக்குப் போனான், “சொல்கிறது புரிந்ததா? அவர்கள் விரும்புகிறார்களா என்பதை.....”

“தெரியும், தெரியும்” என்று அவசர அவசரமாகப் பதில் சொன்னாள் தாய். “நான் எப்படியும் அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்.”