பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

411


புத்தகத்தை எடுத்துப் படிக்கிறாய். நீயும் ஸ்திபானும் ஓர் இருண்ட மூலையில் இருந்து கொண்டு ரகசியமாக வாசிப்பதும் போவதும் ஜனங்களுக்கு என்ன நன்மையை உண்டாக்கிவிடப்போகிறது? ஒன்றுமில்லை.”

“என்னுடைய பேச்சை எவ்வளவு பேர் கேட்கிறார்கள் தெரியுமா?” என்று அவளது ஏளனத்தால் மனம் புண்பட்டு, அவள் கூற்றை அமைதியான குரலில் எதிர்த்தான் அந்த முஜீக். “நான் இங்கே என்னவோ ஈஸ்ட்[1] மாதிரி வேலை பார்ப்பதாக சொல்லலாம். நீ அப்படி நினைக்கக் கூடாது......”

ஸ்திபான் வாய் பேசாது தன் மனைவியைப் பார்த்தான்; தலையைத் தொங்கவிட்டுக்கொண்டான்.

“ஒரு முஜீக் எதற்காகக் கல்யாணம் செய்து கொள்கிறான்?” என்று கேட்டாள் தத்யானா, “அவனுக்காக வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று கூறுகிறார்கள். வேலை நல்ல வேலைதான்.”

“உனக்கு இருக்கிற வேலை காணாதா?” என்று சோர்வுடன் கேட்டான் ஸ்திபான்.

“இந்த வேலையைப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நாளுக்கு நாள் அரைப்பட்டினி கால் பட்டினியாய்க் கிடந்து வாழ வேண்டியதுதான் என் வேலை. தன் வயிற்றைக் கழுவ வசதி தராத இந்த உழைப்பு, பிறக்கும் குழந்தைகளைக் கவனிக்கவும் விடுவதில்லை.”

அந்தப் பெண் எழுந்து வந்து தாயின் அருகே உட்கார்ந்து மூச்சுவிடாமல் பேசினாள். எனினும் அவளது பேச்சில் தன் குறைபாடுகளையோ துக்கத்தையோ காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை இரண்டு வயசாயிருந்தபோது தன்மீது கொதிக்கிற வெந்நீரை இழுத்துக் கொட்டிக்கொண்டு செத்தது. இன்னொன்று குறைமாசப் பிறவியாக, பிறக்கும்போதே செத்துப் பிறந்தது. எல்லாம் இந்த நாசமாய்ப் போகிற வேலையால்தான். இந்த வேலையினால் எனக்கு எதாவது மகிழ்ச்சி உண்டா? முஜீக்குகள் கல்யாணம் பண்ணுவதில் அர்த்தமே இல்லையென்றுதான் நான் சொல்வேன். எந்தவித இடைஞ்சலுமின்றி, நல் வாழ்வுக்காகத் தனிமையாக இருந்து போராடுவதை விட்டு விட்டு, தங்கள் கைகளைத் தாங்களே கட்டிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான். அவர்கள் தனியாக இருந்தால், அந்த மனிதன் மாதிரி சத்தியத்தை நாடி


  1. ஈஸ்ட் (yeast)..... உணவுப் பண்டங்களைப் புளிக்க வைக்க உதவும் பொருள். —— மொ-ர்.