பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

மக்சீம் கார்க்கி


அங்கே ஸ்பிவாகின் என்று ஒரு முஜீக் அவன் முன்னாலேயே வந்து பதில் சொன்னான்: “உன் ஜாரோடு நீயும் நாசமாய்ப்டோ. அவன் எப்படிப்பட்ட ஜாராம்? உடம்பிலே ஒத்தைத் துணி கூட இல்லாமல் உரித்துப் பிடுங்குகிறவன்தானே!’ என்று கூறினான். எனவே, காரியங்கள் இவ்வளவு தூரத்துக்குப் போயிருக்கிறது, அம்மா, அவர்கள் ஸ்பிவாகினைப் பிடித்துச் சிறையில் போடத்தான் செய்தார்கள். இருந்தாலும் அவன் வார்த்தைகளைச் சிறையில் போடமுடியுமா? சின்னஞ்சிறு பிள்ளைகளுக்குக்கூட அவன் பேச்சு ஞாபகத்தில் இருக்கிறது. அவன் பேச்சு என்றென்றும் ஒலிக்கிறது; என்றென்றும் வாழ்கிறது!”

அவன் எதுவுமே சாப்பிடாமல் விறுவிறுவென்று ரகசியக் குரலில் பேசியவாறே, தன்னைச் சுற்றிக் குறு குறுவென விழிக்கும் இருண்ட கண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் தாயிடம் பொல பொலவென்று உதிர்த்துத் தள்ளினான்.

ஸ்திபான் இடையே இரண்டு முறை குறுக்கிட்டுப் பேசினான்:

“நீ முதலில் ஏதாவது சாப்பிடப்பா.”

அந்த இரண்டு முறையும் பியோத்தர் ஒரு ரொட்டித் துண்டையும் கரண்டியையும் கையில் எடுத்ததுதான் மிச்சம்; அவற்றைக் கையில் வைத்தவாறே உல்லாசமாகப் பாடும் வானம்பாடி மாதிரி தனது கதைகளையே சொல்லிக்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்தவுடன் அவன் திடீரெனத் துள்ளியெழுந்து நின்று பேசினான்.

“சரி. நான் போவதற்கு நேரமாகிவிட்டது. வருகிறேன், அம்மா” என்று கூறிவிட்டு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான். “ஒரு வேளை நாம் இருவரும் மீண்டும் சந்திக்க இயலாமலே போகலாம், இருந்தாலும் உங்களைச் சந்தித்ததும் உங்களோடு பேசியதும் என்றென்றும் மறக்க முடியாத இனிய விஷயங்கள் என்பதை மட்டும் நான்! தெரிவித்துக்கொள்கிறேன். சரி அந்த டிரங்குப் பெட்டியில் பத்திரிகைகளைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? கம்பளிச் சவுக்கம் ஏதாவது? ரொம்ப நல்லது—கம்பளிச் சவுக்கம் தானே? ஞாபகம் வைத்துக்கொள், ஸ்திபான். இவன் இன்னும் ஒரு நிமிஷத்தில் டிரங்குப் பெட்டியைக் கொண்டு வந்து சேர்ப்பான். புறப்படு. ஸ்திபான். வருகிறேன், அம்மா. உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!”

அவர்கள் சென்ற பிறகு சுவர்க் கோழிகளின் இரைச்சல்கூடத் தெளிவாகக் கேட்டது. காற்று கூரையின் மீது சல சலத்தது; புகைக் கூண்டு