பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மக்சீம் கார்க்கி


"வாடகை தான் கொடுக்கிறோம்” என்று அவனுக்கு எதிராக இருந்த தாய் சொன்னாள்.

“இடம் ஒன்றும் விசாலமில்லை” என்றான் அவன்.

“பாஷா சீக்கிரமே வந்துவிடுவான். கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்”

“ஏற்கெனவே காத்துக்கொண்டுதானே இருக்கிறேன்” என்றான் அந்த நெட்டை ஆசாமி.

அவனது அமைதி, மிருதுவான குரல், எளிய முகம் முதலியவற்றைக் கண்டு அவளுக்கு ஓரளவு தெம்பு வந்தது. அவனது பார்வை கள்ளம் கபடமற்றதாகவும் நட்புரிமை கொண்டதாகவும் இருந்தது. தெளிந்த கண்களின் ஆழத்திலே ஆனந்தச் சுடர்கள் தாண்டவமாடிக்கொண்டிருந்தன. நெடிய கால்களும் சிறிதே சாய்ந்திருக்கும் கோலமும் கொண்ட அவனது முகத்தோற்றத்திலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதுபோலத் தோன்றியது. அவன் ஒரு நீல நிறச் சட்டையும், பூட்சுகளுக்குள்நுழைக்கப்பட்டிருந்த அகன்ற நுனிப்பாகம் கொண்ட கால்சராயும் அணிந்திருந்தான். அவன் யார் எங்கிருந்து வருகிறான், தன் மகனை அவனுக்கு ரொம்ப நாட்களாகவே தெரியுமா என்பனவற்றையெல்லாம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் திடீரென அவனே தன்னை முன்னே தள்ளிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

“நெற்றியிலே என்ன இத்தனை பெரிய வடு? யார் அடித்தார்கள் அம்மா[1]?”

அவனது குரல் இனிமையாயிருந்தது, கண்கள் கூடச் சிரிப்பதுபோலக் களிதுள்ளிக்கொண்டிருந்தன. ஆனால் அவளோ அந்தக் கேள்வியால் புண்பட்டுப் போனாள்.

“உங்களுக்கு எதற்கப்பா அந்தக் கவலை எல்லாம்?” என்று உதடுகளை இறுக்கிக்கொண்டு கடுப்பு கலந்த மரியாதையுடன் கேட்டாள் அவள்.

“இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே அவன் அவள் பக்கமாக இன்னும் குனிந்து

கொண்டு சொன்னான். நான் எதற்காகக் கேட்டேன் என்றால் எனது


  1. மூலத்தில் ‘அம்மா’ என்பதற்கு ‘நேன்க்கோ’ என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. நேன்க்கோ என்பது உக்ரேனியச் சொல். அம்மா என்பதை மேலும் அருமையாக அழைப்பது–மொ-ர்