பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

மக்சீம் கார்க்கி

"முதலிலேயே நீங்கள் ஏன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?”

அவன் ஒரு கணம் சிந்தித்தான்.

"எப்படியோ அது நடக்காமல் போய்விட்டது. நான் வெளியில்இருந்தால், அவள் சிறையிலாவது, தேசாந்திரத்திலாவது இருப்பாள்.அவள் வெளியிலிருந்தாள், நான் சிறையில் இருந்தேன். சாஷாவின்நிலைமையைப் போலத்தான். இல்லையா? முடிவாக, அவர்கள் அவளைப் பத்து வருஷகாலம் தேசாந்திர சிட்சை விதித்து, சைபீரியாவில் எங்கோ ஒரு கோடியில் கொண்டு தள்ளிவிட்டார்கள். நானும் அவளோடு போக விரும்பினேன். ஆனால் நானும் கூச்சப்பட்டேன்; அவளும் கூச்சப்பட்டாள். அங்கே போன இடத்தில் அவள் வேறொருவனைச் சந்தித்தாள்; அவன் நல்லவன், எனது தோழர்களில் ஒருவன். பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி, வெளிநாட்டுக்குச் சென்று இப்போது அங்கே வசித்துவருகிறார்கள். ஹம்!”

நிகவாய் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்தான்; வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்துப்பார்த்தான். மீண்டும் துடைத்தான். “அட. என் அப்பாவித் தோழா!” என்று அன்போடு கூறிக்கொண்டே தலையை அசைத்தாள் தாய். அவனுக்காக அவள் வருந்தினாள். அதே சமயம் அவளைப்பற்றிய ஏதோ ஒன்று தாய்மையின் பரிவுணர்ச்சியோடு அவளைப் புன்னகை செய்ய வைத்தது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து மீண்டும் பேனாவை எடுத்துத் தான் பேசும் வார்த்தைகளுக்குத் தக்கபடி அதை அசைத்தாட்டிக்கொண்டே பேசினான்: “குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது- எப்போதுமே குறைத்துவிடுகிறது. குழந்தைகள், குடும்பத்தைப் பட்டினி கிடக்காமல் காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தம், போதாமை, ஒரு புரட்சிக்காரன் என்றென்றும் தனது சக்தியை வளர்த்துக்கொண்டே போக கே. பண்டும். அப்போதுதான் அவனது நடவடிக்கைகளும் விரிவுபெறும். இன்றைய காலநிலைக்கு அது அத்தியாவசியம், நாம்தான் மற் றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும், ஏனெனில் பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான். நாம் கொஞ்சம் பின்தங்கினால், சோர்வுக்கு ஆளானால், அல்லது வேறு ஏதாவது சில்லரை வெற்றியிலே மனம் செலுத்தினால், ஒரு பெருந்தவறைச் செய்யும் குற்றத்துக்கு, நமது இயக்கத்தையே