பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

மக்சீம் கார்க்கி


விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம் என்று யோசித்தாள் அவள்.

“இதுதான் விசாரணை நடத்துகிற ஒழுங்கோ ?” என்று அமைதியாகவும் ஜாக்கிரதையாகவும் சிஸோவை நோக்கிப் பேச்சைத் தொடங்கினாள் தாய். “யார் என்ன என்ன செய்தார்கள் என்பதை அறிவதில்தான் இவர்கள் நேரத்தைப் போக்குகிறார்களே தவிர, ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை அறிய விரும்பவில்லை. இவர்கள் எல்லாம் கிழட்டு ஆசாமிகள்; இளைஞர்களை இளைஞர்களைக் கொண்டுதான் விசாரிக்க வேண்டும்.”

“ஆமாம்” என்றான் சிஸோல், “இந்த விவகாரத்தை நாமெல்லாம் புரிந்து கொள்வது சிரமம்தான் - படுசிரமம்!” அவன் ஏதோ யோசித்தவாறே தலையை ஆட்டினான்.

காவலாளி நீதிமன்றத்தின் வாயிற் கதவைத் திறந்து விட்டுவிட்டு, வாய்விட்டுக் கத்தினான்.

“உறவினர்களே! உங்கள் அனுமதிச் சீட்டுக்களைக் காட்டுங்கள்!”

“சீட்டுக்கள்!” என்று யாரோ குத்தலாகச் சொன்னார்கள். “இதென்ன சர்க்கஸ் காட்சியா?”

ஜனங்களிடம் ஓர் உள்ளடங்கிய எரிச்சல் குணம் லேசாக வெளித்தோன்றியது. அவர்கள் மிகுந்த இரைச்சலோடு பேசினார்கள், அரட்டையடித்து காவலாளிகளோடு விவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.

25

சிஸோவ் பெஞ்சில் உட்கார்ந்தவாறே ஏதோ வாய்க்குள் முனகிக்கொண்டான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.

‘ஒன்றும் பிரமாதமில்லை. ஜனங்கள் முட்டாள்கள்,.....” மணி அடித்தது.

“அமைதி, ஒழுங்கு!”

எல்லோரும் மீண்டும் ஒரு முறை எழுந்து நின்றார்கள். நீதிபதிகள் ஒவ்வொருவராக வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். கைதிகளையும் அவர்கள் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

“கவனி!” என்று ரகசியமாகக் கூறினான் சிஸோவ், “அரசாங்க வக்கீல் பேசப் போகிறார்.”