பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

மக்சீம் கார்க்கி


பாசவுணர்ச்சியைவிட, அவனிடமேதான் அதிகமான பாசம் கொள்ள வேண்டும் என்பதை அவள், உணர்ந்து அவனிடம் திரும்பிப் பேசினாள்.

“உங்கள் விசாரணையை நான் அப்படியொன்றும் பெரிதாக நினைக்கவில்லை!”

“ஏன் அம்மா?” என்று நன்றியுணர்வோடு புன்னகை செய்துகொண்டே கேட்டான் அவன்:“பசு கிழடேயானாலும் பாலின் ருசி போகுமோ?....”

“அதைப்பற்றிப் பயப்படுவதற்கே ஒன்றுமில்லை. ஆனால் இந்த விசாரணையால் யார் சொல்வது சரி, யார் சொல்வது தப்பு என்பது வெளி வரவேயில்லை “ என்று அவள் தயக்கத்தோடு கூறினாள்.

“ஓஹோ, அதுவா? அதைத்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று சொன்னான் அந்திரேய். “அவர்கள் உண்மையைத் தேடிக் காண்பதில் அக்கறை கொண்டவர்கள் என்று நினைத்தீர்களா?”

“இது ரொம்பப் பயங்கரமாயிருக்குமென்று நான் நினைத்தேன்” என்று பெருமூச்சோடும் புன்னகையோடும் சொன்னாள் அவள்.

“அமைதி! ஒழுங்கு!”

எல்லோரும் அவரவர் இடத்துக்கு ஓடிப்போனார்கள்.

பிரதம நீதிபதி தமது கையொன்றை மேஜை மீது ஊன்றிக் குனிந்தவாறு மறு கையால் தமது முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை எடுத்துப் பிடித்தார்; மெலிந்து இரையும் குரலில் அதை வாசித்தார்.

“அவர் தீர்ப்பை வாசிக்கிறார்” என்றான் சிஸோவ்.

அந்த அறை முழுவதும் அமைதியாயிருந்தது. ஒவ்வொருவரும் அந்தக் கிழவரையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். ஏதோ கண்ணுக்குப் புலனாகாத, கையிலே தாங்கிய அசைவற்ற தடியைப்போல், அவர் தோற்றம் அளித்தார். மற்ற நீதிபதிகளும் எழுந்து நின்றார்கள். அந்த ஜில்லா அதிகாரியும் எழுந்தார். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, கண்களை முகட்டை நோக்கித் திருப்பியவாறே நின்றார். நகர மேயர் தமது மார்பைக் கைகளால் கட்டிக்கொண்டு நின்றார். பிரபு வம்சத் தலைவர் தமது தாடியைத் தடவிக்கொடுத்தார். நோயாளி நீதிபதியும், கொழுத்த முகம்கொண்ட அவரது சகாவும். அரசாங்க வக்கீலும் கைதிகள் நின்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். சித்திரத்திலுள்ள அந்த முகத்தின்மீது ஒரு பூச்சி வர்ந்து

சென்றுகொண்டிருந்தது.