பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

507


இன்றிரவ இங்குத் தங்காமல் வேறெங்காவது போயிருப்பதே நல்லது. என்ன சொல்கிறீர்கள். இங்கே நடக்கப்போகும் களேபரத்தைக் காண உங்களுக்குச் சகிக்காது. மேலும் அவர்கள் உங்களையும் கொண்டுபோய்விடக்கூடும். பாவெலின் பேச்சுப் பிரதியை ஊர் ஊராய் விநியோகிப்பதற்கு நீங்கள் அவசியம் தேவை.. ”

“அவர்கள் என்னை என்ன செய்யப்போகிறார்கள்?”

நிகலாய் தன் கண்களுக்கு முன்னால் கையை உயர்த்தி வீசிக்கொண்டே உறுதியோடு சொன்னான்:

“இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் மோப்பம் பிடித்து உணர எனக்குத் தெரியும், நீங்கள் லுத்மீலாவுக்கும் பேருதவியாய் இருக்க முடியும். நாம் சந்தர்ப்பங்களை இழக்காதிருப்பதே நல்லது.....”

“தன் மகனது பேச்சை அச்சடிப்பதில் தானும் உதவ முடியும் என்ற எண்ணம் தாய்க்கு மனமகிழ்ச்சியைக் கொடுத்தது.”

“அப்படியானால் நான் இதோ போகிறேன்” என்றாள்.

அவள் அத்துடன் வியப்புணர்ச்சி மேலிடப் பேசினாள்.

“நான் எதைக் கண்டும் இனிமேல் பயப்படவே போவதில்லை. எல்லாம் ஆண்டவன் அருள்”

“சபாஷ்!” என்று அவளைப் பார்க்காமலேயே கூறினான் நிகலாய்.. “சரி, என் டிரங்குப் பெட்டியும் துண்டும் எங்கிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்களோ எல்லாவற்றையும் சூறையாடி விட்டீர்கள்! எனவே என் சொந்தச் சாமான்களைக் கண்டுபிடிப்பதுகூட எனக்குச் சிரமமாய்ப் போய்விட்டது!”

சாஷா ஒன்றுமே பேசாமல் கிழித்துப்போட்ட காகிதங்களை அடுப்பில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலைக் கரியோடு- சேர்த்து நிரவிக்கொண்டிருந்தாள்.

“போவதற்கு நேரமாகிவிட்டது. சாஷா” என்று தன் கையை நீட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய். “போய்வாருங்கள், ஏதாவது சுவாரசியமான புத்தகங்கள் அகப்பட்டால் எனக்கு அனுப்பி வைக்க மறந்துவிடாதீர்கள். போய் வாருங்கள். அருமைத் தோழியே, போய் வருக! ஜாக்கிரதை......”

“உங்களுக்கு என்ன நெடுங்காலச் சிறைவாசம் கிட்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள் சாஷா.

“யாருக்குத் தெரியும்? ஒரு வேளை அப்படியே நேரலாம். எனக்கு எதிரான சாட்சியங்கள் பல அவர்களிடம் இருக்கின்றன. நீலவ்னா.