பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

மக்சீம் கார்க்கி


உறுதியோடும் அமைதியோடும் கூறினாள் லுத்மீலா. “பலாத்காரத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. நான் அடுத்தவர்களைச் சண்டைக்கு அழைக்கும்போது நானும் சண்டை போட்டுத்தானே தீர வேண்டும்.”

நெருப்பின் ஒளி அவள் முகத்திலிருந்து நழுவி மறைந்துவிட்டது. எனவே மீண்டும் அவளது முகத்தில் அகந்தையும் கடுமையும் பிரதிபலித்தன.

“உன் வாழ்க்கை மோசமாயிருக்கிறது” என்று அனுதாபத்தோடு தன்னுள் நினைத்துக்கொண்டாள் தாய்.

லுத்மீலா பாவெலின் பேச்சை விருப்பமின்றிப் படிக்கத் தொடங்கினாள்; ஆனால் படிக்கப் படிக்க அவளுக்கு ஆர்வம் அதிகரித்து அந்தக் காகிதத்தின்மீதே குனிந்து விழுந்து படித்தாள். அந்தப் பேச்சுப் பிரதியைப் பக்கம் பக்கமாகப் பொறுமையற்றுப் புரட்டினாள்; கடைசியாக, படித்து முடிந்தவுடன் அவள் எழுந்தாள்; தோள்களை நிமிர்த்தி நின்றாள்; தாயை நோக்கி வந்தாள்.

“அருமையான பேச்சு!” என்றாள் அவள்.

ஒரு நிமிடம் தலையைத் தாழ்த்தி யோசனை செய்தாள்.

“நான் உங்கள் மகனைப் பற்றி உங்களிடமே பேச விரும்பவில்லை; நான் அவனைச் சந்தித்ததும் இல்லை. ஏன் துயரப் பேச்சில் ஈடுபடவேண்டும் எனக்கு அது பிடிப்பதில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவனை. தேசாந்திர சிட்சை விதித்து அனுப்புவதால் உங்களுக்கு ஏற்படும் வேதனை என்ன என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்று கேட்கிறேன்- இந்த மாதிரிப் பிள்ளை பெற்றிருப்பது நல்லதுதானா?”

“ரொம்பவும்...” என்றாள் தாய்.

“பயங்கரமாயில்லைா ?”

“இப்போது இல்லை” என்று அமைதி நிறைந்த புன்னகையோடு சொன்னாள் தாய்.

லுத்மீலா தனது பழுப்புக் கரத்தால் தன் தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுத்தவாறே ஜன்னல் பக்கம் திரும்பினாள். அவளது முகத்தில் ஏதோ ஒரு சாயை படர்ந்து மறைந்தது: ஒரு வேளை அவள் தன் உதட்டில் எழுந்த புன்னகையை மறைக்க முயன்றிருக்கலாம்.

“சரி, நான் விறுவிறென்று அச்சு கோத்துவிடுகிறேன். நீங்கள் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். இன்று பூராவுமே உங்களுக்கு ஒரே