பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

73


அவள் பெருமூச்சு விட்டாள்; உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கத் தயாராயிருக்கும் குரலை உள்ளடக்கிக்கொண்டு, சிறிது நேரம் கழித்து அவள் கூறினாள்.

“அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்? அந்த மனிதர்களின் உடம்பைக் கிழித்து, எலும்புகளை நொறுக்கி...... அதைப்பற்றி நினைத்தாலே, ஐயோ, என் கண்ணே!... என்னால் தாங்க முடியவில்லையடா.........”

“அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது........”

11

மறுநாள் புகின், சமோய்லவ், சோமவ் முதலியவர்களையும் வேறு ஐந்து பேர்களையும் கைதுசெய்துவிட்டதாகத் தெரியவந்தது. அன்றிரவில் பியோதர் மாசின் பாவெலின் வீட்டிற்கு வந்தான். அவனது வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. அந்தச் சோதனையால், தான் ஒரு வீரனாகிவிட்டதாகக் கருதி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.

“நீ பயந்துவிட்டாயா, பியோதர்?” என்று கேட்டாள் தாய்.

அவன் வெளிறிப் போனான்; முகம் கடுகடுத்தது; மூக்குத் துவாரங்கள் நடுநடுங்கின.

“அந்த அதிகாரி என்னை அடித்து விடுவான் என்று நான் பயந்தேன். அவன் பூதாகாரமாக இருந்தான். கரிய தாடி மயிரடர்ந்த கைகள். கண்களே இல்லாது போனவன்மாதிரி கறுப்பு மூக்குக் கண்ணாடி வேறு மாட்டியிருந்தான். அவன் ஆங்காரமாகச் சத்தமிட்டு, தரையைக் காலால் மிதித்தான், ‘உன்னை நான் சிறையில் போடுவேன்’ என்று கத்தினான். என்னை இதுவரையிலும் யாரும் அடித்ததில்லை. என் தாயும் தந்தையும் கூட அடித்ததில்லை. நான் அவர்களுக்கு ஒரே பிள்ளை, செல்லப்பிள்ளை.”

அவன் கண்களை ஒரு கணம் மூடினான்; உதடுகளைக் கடித்துக்கொண்டான்; இரண்டு கைகளாலும் தலைமயிரைப் பின்புறமாகத் தள்ளிவிட்டுக்கொண்டான். பிறகு செக்கச் சிவந்த கண்களோடு பாவெலைப் பார்த்துச் சொன்னான்.

“எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால் மூமூ அவ்வளவுதான் - நான் ஒரு வாளைப்போல் அவன்மீது பாய்ந்து. சாடுவேன்; என்