பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தாவரம்-வாழ்வும் வரலாறும் நாரான வேர்கள் ஒருவிதையிலேத் தாவரங்களில் காணப் படும். பெரும்பாலும் புல் வேர்கள் கொத்தாகவும், நார் போன்றும் உள்ளன. இவற்றில் உண்மையான வேர்கள் இல்லை. தண்டின் அடியிலும் கணுவின் அடியிலும் தோன்றும் நல்ல மணமுள்ள சற்றுக் கரு நிறமான வெட்டிவேர் (coleus vettiveroides), பழுப்பு f'punrør sisterop # st Gouf (vettiveria euphrasioides) op 560ausor சற்று நீண்டு வளரும். வேர் மாற்றம்

மூல வேரும் பக்க வேர்களும் பலவாறு பருத்துச் சதைப் பற்றுடையனவாய் மாறி இருப்பது வேர் மாற்றம் எனப்படும். இத்தகைய வேர்களில் உணவுப் பொருள்கள் சேர்த்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றுள் இருபுறங் கூம்பியவை முள்ளங்கிக் cßgpáig, abgth (radish raphanus satinus) (Lil_tò 24). @AG6i) விதையிலேக்குக் கீழேயுள்ள பகுதி வித்திலேக் கீழ்த் தண்டு எனப் படும். இதை ஆங்கிலத்தில் ஹைபோகாட்டில் (hyphocotyl) என்பர். டர்நிப் (turnip) பீட்ரூட் (beet-root) வேர்கள் உருண்டை வடிவமாகப் பருத்துள்ளன. இவைகளின் அடியில் வேர் வரவரச் சிறுத்து இருக்கும். வித்திலேக் கீழ்த் தண்டு பருத்து டர்நிப் கிழங்காகவும், வித்திலேக் கீழ்த் தண்டும் அதற்கு அடியிலுள்ள வேரும் பருத்து பீட்ரூட் கிழங்காகவும் ஆகின்றன. இவைகளுக்கு உருண்டை வேர்கள் ஒன்று பெயர். கூம்பு வடிவுள்ள காரட் வேர், பருத்துக் கீழ்ப்புறச்வரவாக் குறுகியிருக்கும். வள்ளிக் கிழங்கு பல வேறு வடிவங்களேயுடையது. இதன் வேர்ப் பகுதி பருத்து உணவுப் பொருள்களேக் கொண்டுள்ளது. இவற்றைக் கிழங்கு வேர் (tuberous roots) என்பர். இவை ஒரிடத்தில் பலவாகத் தோன்றும்போது குலேவேர் (fascicled root) எனப்படும். சதாவரி (asparagus), டபாஸ்காய் (ruellia) முதலிய செடிகளில் இவை காணப்படும். மாங்காய் இஞ்சியின் வேர் நீண்டு வளரும். இவ் வேர்கள் திடீரெனப் பருத்து மெல்லியனவாக நீளும். இவை முடிச்சுவேர் (modulose root) எனப்படும். சுருங்கும் வேர்கள் - சில ஒருவிதையிலேத் தாவரங்களில் நேராக நீண்டு, சதைப் பற்றுடன் தடித்த சில வேர்கள் கிளேக்காமலும், வேர்த்துரவி இல்ல்ாமலும் வளரும். இவை இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே வாழும். முதலில் இவை குளுக்கோஸ் என்ற சர்க்கரைப் பொருளால் நிரம்பப்பெற்றிருக்கும். இச் சர்க்கரை உணவாகி வரும்பொழுது இவ் வேர்கள் சுருங்க ஆரம்பிக்கும். அப்பொழுது