பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தாவரம்-வாழ்வும் வரலாறும் வேரைச் சுற்றிலும் சிறு வளையங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறு வேர்களில் உண்டாகும் வளையங்களைக் குங்குமப் பூச் செடியில் (crocus satius) காணலாம். அண்டை வேர்கள் மருதம் (terminalia arjuna), எரியோ டெண்ட்ரான் (eriodendron) முதலிய பெரு மரங்களில் உள்ளன. இவை பட்டையாகத் தடித்துச் சுவர் எழுப்பியதுபோல் உயர்ந்து மரத்தைச் சுற்றிலும் வளரும்.