பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.மாயக்காரி வசீகர சுந்தரி

இன்பவள நாட்டின் அரசர், அரசி முகிலியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தத் தொடங்கியபோது, அவள் பிரிவைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் மீண்டும் மீண்டும் ஒவ்வோர் ஆண்டும் அவள் பிரிந்து சென்றதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதுவே நாளடைவில் அவள்மீது வெறுப்பாக மாறிவிட்டது.

அந்த ஊரில் வசீகர சுந்தரி என்று ஒருத்தி இருந்தாள். அவள் அந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல. வடக்கே மிகத் தொலைவில் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து வந்தவள். அவள் மிக அழகானவள். அரசர் உலாவரும்போது ஒரு நாள் வசீகர சுந்தரியைக் கண்டுவிட்டார். அவள் அழகு அவரை மயக்கமடையச் செய்தது. வசீகர சுந்தரி சாதாரணப் பெண் அல்ல. அவள் ஒரு மாயக்காரி. அரசர் தன்னை விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டவுடன் அவள் அவரைத் திருமணம் செய்துகொண்டு-