உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

விடவேண்டும் என்று திட்டமிட்டாள். அரசி முகிலி இல்லாத நாட்களில் அடிக்கடி அரண்மனைக்குப் போய் வந்தாள். தன்னுடைய மாயவித்தைகளைக் காட்டி அரசரை மயக்கினாள். கடைசியில் அரசி முகிலி இல்லாதபோது, அரசர் அவளை மறுமணம் செய்து கொண்டுவிட்டார். மாயக்காரியை அரசர் மணம் புரிந்தது, அந்த நாட்டு மக்களையெல்லாம் வெறுப்படையச் செய்தது.