பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10எங்கிருந்தோ வந்த அவள் இன்பவள நாட்டின் அரசியாகி விட்டாள். அரசியானவுடன் அவள் அரண்மனையிலேயே தங்கினாள். அவளுக்கு இளவரசன் வில்லழகனையும், இளவரசி பொன்னழகியையும் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. அவர்கள் நல்ல பிள்ளைகளாய் இருப்பதைக் கண்டு அவள் கோபித்துக் கொண்டாள். அவர்கள் அழகாய் இருப்பதைக் கண்டு அவள் அருவெறுப்புக் கொண்டாள். எப்போதும் அவர்கள் உண்மை பேசுவதைக் கண்டு எரிந்து விழுந்தாள். அவர்கள் சிரித்து விளையாடுவதைப் பார்த்து அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அவர்களை அடித்து உதைத்து அடிமைகளைப்போல் வேலை வாங்கினாள். கடுகடுத்துப் பேசி அவர்களைக் கண்கலங்க வைத்தாள். கடைசியில் அவர்கள் உடுத்தியிருந்த பட்டாடைகளைப் பறித்துக் கொண்டு அரண்மனையை விட்டே விரட்டிவிட்டாள்.