உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கோபம் வந்து விட்டதால் தான் மேகங்கள் கூடவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

பஞ்சம் நீடித்தது. வயல்கள் விளையவில்லை. மரங்களும் செடி கொடிகளும் கருகிப் போயின. உணவு ஒன்றும் இல்லாமல் மக்கள் வாடினார்கள். பட்டினிச் சாவு அதிகரித்தது.

தெய்வங்களுக்கு ஏதோ கோபம் ஏற்பட்டு விட்டது என்று அரசன் நினைத்தான். பக்கத்து நாட்டிலே ஒரு பெரிய மடாதிபதி இருந்தார். அந்த மடாதிபதி தெய்வங்களோடு அடிக்கடி பேசுவார் என்று அரசன் கேள்விப்பட்டிருந்தான். அவருக்கு முன் காலத்தையும் பின் காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருந்ததென்று அரசனிடம் பலர் கூறியிருந்தார்கள். ஆகவே, அரசன் தன் அதிகாரிகள் சிலரை அந்த மடாதிபதியிடம் அனுப்பினான். தன் நாட்டில் மழை பொய்த்துப் போனதற்குக் காரணம் என்ன என்றும், அதற்கு மாற்றுக் கழுவாய் என்ன என்றும், கேட்டறிந்து வரும்படி அவன் அந்த அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான்.

இதையறிந்த வசீகர சுந்தரி ஒரு தந்திரம் செய்தாள். மடாதிபதியிடம் அனுப்பப்பட்ட அதிகாரிகளை அவள் தனியாகச் சந்தித்தாள். அவர்களுக்கு நிறையப் பொன்னும் பொரு-