உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காரி வசீகர சுந்தரியையும் பழித்துப் பேசிக் கொண்டும், அந்த அருமைக் குழந்தைகளைக் காப்பாற்றிய தெய்வங்களைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும் தங்கள் தங்கள் வீடு நோக்கிக் கலைந்து சென்றார்கள்.

அரசி முகிலி, தன் குழந்தைகளைப் பிரிந்து சென்றாலும் அவர்களைக் கவனிக்காமல் விட்டுப் போய்விடவில்லை. அவள் மேலேயுள்ள மேகமண்டலத்திலிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் தான் கடைசி நேரத்தில், மேகமண்டலத்தில் இருந்த தங்கக் குதிரையை யனுப்பித் தன் குழந்தைகளைக் காப்பாற்றினாள்.