பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


அன்று இரவு அவன் தன் சிற்றப்பனுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிடும்போதே அவர்கள் பல செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். வீரர்களைப் பற்றிய பேச்சு வந்தது. பேச்சோடு பேச்சாக அந்தச் சிற்றப்பன் “அந்தக் காலம் மலையேறி விட்டது. அப்படிப்பட்ட வீரர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்” என்று சலித்துக் கொண்டான்.

“ஏன் இல்லை? எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்டும் வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை” என்றான் வெற்றிவேலன்.

இதைக் கேட்டு அவன் சிற்றப்பன் சிரித்தான். “உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. இங்கிருந்து மிகத் தொலைவில் தேன்கதலி நாடு என்று ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டிலே ஒரு தங்கக் குதிரை இருக்கிறது. அந்தத் தங்கக் குதிரையை இங்கு கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு வீரனை தேடித்தேடிப் பார்த்து எனக்கு அலுத்து விட்டது. அந்தக் குதிரை மட்டும் கிடைத்து விட்டால் நம் நாட்டிற்கு ஒரு பெருஞ்செல்வம்-