பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வீரன் புறப்பட்டான்

வெற்றிவேலன் கடற்கரைக்குச் சென்று ஒருபெரிய மரக்கலம் கட்டினான். அந்த மரக்கலத்திற்கு வேண்டிய மரங்களையும் கயிறுகளையும் வேறு பொருள்களையும் சிற்றப்பனின் ஆட்கள் தயாரித்துக் கொடுத்தார்கள். எப்படியாவது அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினால்போதும் என்று சிற்றப்பன் எல்லா உதவிகளும் செய்தான். அந்த மரக்கலத்தில் அவனுடன் ஐம்பது வீர இளைஞர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

பயங்கரமான கடலில் அந்த மரக்கலம் தன் பயணத்தைத் தொடங்கியது. தேன்கதலி நாடு இருக்கும் திசை நோக்கி அதன் பாய்மரங்களைக் காற்று தள்ளிக்கொண்டு சென்றது. இளம் வீரர்கள் ‘வெற்றி வெற்றி ’என்று முழங்கிக்கொண்டு அந்தக் கப்பலில் சென்று கொண்டிருந்தார்கள்.

கப்பல் புறப்பட்ட மறுநாளே வெற்றிவேலனின் சிற்றப்பன் தன் அண்ணன் இருந்த இடத்திற்குச் சில ஆட்களை அனுப்பினான். ஒரு நாள் அரசரும் அரசியும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபொழுது அந்த ஆட்கள் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள்.