உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மூன்று அருஞ்செயல்கள்

தங்கக் குதிரை தன் நாட்டை விட்டுப் போய்விடாது என்ற உறுதி அரசனுக்கிருந்தது. அப்படியானால், அந்த அருஞ்செயல்கள் மிகக் கடுமையானதாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்கள் மற்ற வீரர்கள். ஆனால் வெற்றிவேலன் அயர்ந்து விடவில்லை.

“அரசே, அந்த அருஞ்செயல்கள் என்ன என்று கூறுவீர்களா?” என்று கேட்டான்.

“சொல்கிறேன் கேள்” என்று கூறத் தொடங்கினான் அரசன்.

“என்னிடம் யாருக்கும் அடங்காத இரண்டு பெரிய எருதுகள் இருக்கின்றன. அவை மூச்சு விடும்போது நெருப்பு வெளிப்படும். நெருப்பு மூச்சுவிடும் அந்த இரண்டு எருதுகளையும் அடக்கி நுகத்தடியில் மாட்டி நான்கு காணிநிலத்தையும் உழுது தர வேண்டும்.

“இரண்டாவதாக, உழுது முடித்த அந்த நிலத்தில் பறக்கும் மாயப் பாம்புகளின் பற்கள் சிலவற்றை விதையாக நடவேண்டும். நட்ட-