வுடனே நிலத்திலிருந்து முளைத்தெழும்பும் மாய வீரர்களைப் போரிட்டு கொல்ல வேண்டும்.
“கடைசியாக, தங்கக் குதிரையின் அருகில் இருந்து இரவும் பகலும் தூங்காமல் காவல் புரியும் வேதாளத்தைக் கொன்று வீழ்த்தவேண்டும். இந்த அருஞ்செயல்களைச் செய்து முடித்தால் அந்தத் தங்கக் குதிரையை நீ அடைவதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்” என்று சொல்லி முடித்தார் அரசர்.
“எப்படியும் நான் இந்த அருஞ்செயல்களை முடிப்பேன்” என்று உறுதி மொழிந்து விட்டு வெளியேறினான் வெற்றிவேலன்.
அரச சபையில்தான் அவன் உறுதி கூறினானே தவிர, அவன் உள்ளத்திற்குள் ஒரு தளர்ச்சி ஏற்படத்தான் செய்திருந்தது. இல்லாத தெய்வங்களை யெல்லாம் வேண்டிக் கொண்டு தன் கப்பலுக்குத் திரும்பினான். அங்கே அவனுக்கு ஓர் உதவி காத்துக் கொண்டிருந்தது.
இளவரசி மேகமாலைதான் அங்கே காத்துக் கொண்டிருந்தாள். அவள் சில மாய மருந்துகள் கொடுத்தாள். அவை கையில் இருந்தால் கத்தியும் நெருப்பும் அவனை