உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

தால் நெருப்பின் அனல் அவனை ஒன்றும் செய்யவில்லை. வெற்றிவேலன் நிலத்தின் நடுவில் நின்றான். எதிர்ப் புறத்திலிருந்து அவனைத் தாக்க ஓடி வந்தன எருதுகள். இரண்டும் நெருங்கி வரும் நேரம் வெற்றிவேலன் சட்டென்று தான் நின்ற இடத்தை விட்டு விலகிக் கொண்டான். இரண்டு எருதுகளும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டன. உடனே அந்த எருதுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று கோபம் ஏற்பட்டு இரண்டும் முட்டி மோதிக் கொண்டு சண்டையிட்டன. தங்கள் பொது எதிரியை அவை மறந்துவிட்டன. வெற்றிவேலன் அவற்றைக் கவனித்துக் கொண்டு நின்றான். அவை சண்டையிட்டுத் களைத்த நேரம் பார்த்து அவற்றின் அருகில் பாய்ந்து சென்று இரண்டையும் கொம்பைப் பிடித்து இழுத்தான். தயாராக இருந்த ஏரின் நுகத்தடியின் கீழ் அவற்றை நுழைத்துப் பூட்டினான். அவை பசுப் போல் அடங்கிவிட்டன. அவன் முதுகில் தட்டிக் கொடுக்கக் கொடுக்க முன் நடந்து சென்றன. தட்டிக்கொடுத்துத் தட்டிக்கொடுத்து அவன் அந்த நான்கு காணி நிலத்தையும் உழுது விட்டான். தங்களை அவன் அடித்துத் துன்புறுத்தாததால் அவை அவனுக்கு நன்றியுடன் வேலைபார்த்தன. மக்கள் எல்லோரும் இந்தச் சாதனையை வைத்த கண் வாங்காமல்