பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிவேலன் உழுது முடித்து எருதுகளை மீண்டும் கட்டிப்போட்டபோது மாலைக் கதிரவன் மேலை மலைகளில் சாய்ந்து விட்டான்.

மறுநாள் காலையில் நிலத்தில் விதையிடலாம் என்று அரசர் கூறினார். மக்கள் கலைந்து சென்றார்கள். வெற்றிவேலன் தன் வீரத் தோழர்களுடன் மரக்கலத்திற்குத் திரும்பினான். அரசர் தன் ஆட்களோடும் மக்களோடும் அரண்மனை சென்றார்.