பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின்

இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள்.

‘தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக் கதை அத்தகைய சிறந்த கதைகளிலே ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள ஒரு கதையைத் தழுவி இதை எழுதியிருக்கிறார் திரு. நாரா நாச்சியப்பன். அவர் சிறுவர்களுக்காகத் தமிழில் சிறந்த பல நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு வழி வகுத்துக் கொண்டுவரும் பலருள் திரு நாரா. நா. அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். அவருடைய தங்கு தடையின்றிச் செல்லும் தமிழ் நடை மாணவர்களின் மொழி வளர்ச்சிக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.


தமிழாலயம்