பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு



1. உடனே செயல்படு.

மலையை மேல் நோக்கி ஊற்றுநீர் பாய்வதில்லை ஆனால் கடலை நோக்கித்தான் ஓடுகிறது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கீழ்நோக்கி ஓடும் தன்மை உடையவர்கள

இயற்கை முறையை ஒத்து இருவரும் மனமொத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கீழ் இறங்கிச் செல்ல வேண்டும் மனம் ஒப்பி வாழ்தலே சிறந்தது. தொன்று தொட்டு இயங்கிவரும் இயற்கை நெறி பொய்ப்பதில்லை

2. எல்லைக்கு அப்பால்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஏதோ ஒன்று உள்ளது. கவனி, அமைதியாய் உள்ளது முகர்ந்து, சுவைத்துப் பார் ஒன்றுமில்லை. தொடு, வெறுமை அதைக் கண்கள் கண்டதில்லை அதன் உயரம், அகலம், எடை, ஆழம் எங்குள்ளது? அது ஏதோ எனச் சொற்கள் கூறுகின்றன, இருந்தும் அதை அளவிட முடியாது

அது கொடுக்கப்படுகிறது, கொள்வதில்லை பெறப்படுகிறது, ஆனால் எடுக்கப்படுவதில்லை அது நமக்கு, நமக்காக, நமமுள் நேருகிறது. ஆனால் அதைக் காண முடியாது