பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 109


132. மாறுதலுக்கு உட்படு

முற்காலத்தில் அறிவர்கள் சொல்லித் தந்தனர் “விட்டுக் கொடு, முழுமையாயிரு. வளைந்து கொடு வெற்றியடை வெறுமை செய், நிரப்பு”

வளையாததும், கடினமானதும் முறிகின்றன மென்மையானதும். விட்டுக் கொடுத்தலும் நிலைக்கின்றன

ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்க, மாறாததைக் கெட்டியாகப் பற்றிக் கொள். அங்கே முறிவு ஏற்படும் மாற்றத்திற்கு உடன்படு; உயரே எழுதல், செல்லுதல் இவற்றின் ஒத்திசைவுப் பாதையில் வளைந்து கொடு, பின் மாறும் ஓசையற்ற தன்மையில் உடையாது இரு

133. இரண்டுக்கும் இடையே

திரும்புதல் விலகுவதை விரும்புகிறது. நிற்பது செல்ல விரும்புகிறது விடுதலையாவது ஆட்சியைத் தொடர்கிறது ஒன்றிலிருந்து ஒன்று தோன்றவே விரும்புகிறது. அமைதியைப் பேச விரும்புகிறது மாறாமையை மாற்ற அறிகிறது. வெறுமை நிறைவை நாடுகிறது.

கணத்திற்குக் கணம் மனம் மனத்திற்கே சூழ்ச்சி செய்கிறது எண்ணங்கள் சிநதனையை வட்டமிடுகின்றன. வெளி வழி உள்ளே உள்ளது ஊடே என்பது இடையில் உள்ளது.