பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


அசைந்து விரிந்து மூடியும் திறந்து கொண்டிருக்கும் மனத்தின் கதவுகள் ஊடே இரண்டு பாதிகளையும் பற்றிக் கொள் முழுமனம் என்பது வெறுமையான மனம் போன்றதே

134. மறைபுதிரே எண்ணங்கள்

இப்போதைய நேர்மைக்குச் சொற்கள் பதிலளிக்கா மாறுகின்ற எல்லாவற்றையும் மனத்தில் பதந்துள்ள எண்ணங்கள் புரிந்து கொள்ளாது. மாறுகின்ற எண்ணங்கள் எப்படி மாறாமலிருப்பவற்றை அறிந்து கொள்ள முடியும்?

எண்ணங்கள் என்ற புதிரில், எந்த எண்ணங்கள் மாறுகின்றன? எவை மாற்றமில்லாதவை? மாறுகின்ற எண்ணங்கள மாறாமலிருக்கின்றனவா? மாறாத எண்ணங்கள் மாறுகின்றனவா? பறந்து போன மாறாத எண்ணங்கள மாறாமல் நினைவு கூரப்படுகின்றனவா?

மாற்றம், மாற்றமில்லாதது என்ற குழப்பத்தில் நாம் ஒவ்வொன்றையும் எப்படிக் காண்பது? மாறும் எண்ணங்கள நம்மை மாற்ற எங்கே தேடுகின்றன? எவ்வாறு மாறாத எண்ணங்கள் நம்மை மாற்ற அறியும்? எண்ணம் என்ற சிக்கலில், எண்ணங்கள் தங்களையேப் புரிந்து கொள்ளாவிடில், நாம் எப்படி ஒருவரை ஒருவர் அறியக் கூடும்?

மாற்றம் மாற்றமின்மை இவற்றுக்கிடையே, நாம் சொற்களின்றி, எண்ணமின்றி ஒன்றாக இருக்கிறோம்