பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன் 盤 113

135. கண்டுபிடி, இழ

இழப்பு என்ற ஒன்று இல்லாதவரை, காண்பது என்ற ஒன்று இல்லை ஆண் தன்னை இழந்து காண்கிறான் பெண்ணை, பெண் தன்னை ஆணிடம் இழந்து ஆணைக் காண்கிறாள்

காண்பது என்ற ஒன்று இல்லாதவரை இழப்பு என்பதில்லை. ஆண் பெண்ணிடம் தன்னைக் காண இழக்கிறான் பெண், ஆணிடம் தன்னைக் காண இழக்கிறாள்

இழப்பதுதான் காண்பது காண்பதுதான் இழப்பு ஆகவே கண்டுபிடி இழ இழ, கண்டுபிடி

136. ஒருவர்க்கு மற்றவர்க்கும் இடையில்

முதல் நிலையான உந்தாற்றலுடன் கூடிய ஏதோ ஒன்று ஆணையும் பெண்ணையும் ஒருவருக் கொருவரை அதைக் காண முடியாத போதிலும் எப்போதும் உள்ளது அதை இழக்க முடியாவிட்டாலும் அதைக் கண்டு பிடிக்க முடியாது

ஒருவரிடமும் மற்றவரிடமும் இடையே உள்ள பிரிவை நட்புண்டாக்கும் எதோ ஒன்று அது. எல்லாமாக இருந்தும இல்லாமலும் இருப்பது ஏதோ