பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


ஒன்று. கண்டு பிடிக்காதவரை தன்னைத் தானே நிரப்பிக் கொள்ளும் வெறுமையாக்கும் ஒன்று. இழக்கும்வரை வெறுமை செய்யும் முழுமையும்.

ஆண் இல்லாது பெண்ணில்லை. பெண் இல்லாது ஆண் இல்லை இருவருமே ஒருவர் மற்றவரில் கண்டு பிடித்தும், இழந்தும் இருக்கட்டும் என அறிவிக்கிறது.

137. அறிதல் ஆழமாகும்

கண்களில் ஊடுருவிப் பார்ப்பது என்பது சிறப்பான உள்ளத்தை உருக்குவதாகும். முதலில் கண்கள் கண்களை நெருக்கமாகக் காண்பதைத் தவிர்க்கின்றன.

காண்பது என்பது தனிப்பட்ட உள்ளம் உருக்குவ தாகும். எனவே தனியான நம்பிக்கை ஏற்படாதவரை அம்மண உடல்கள் கண்களைத் தவிர்க்கின்றன.

ஆணும் பெண்ணும் எல்லா உணர்வுகளுடனும் ஒருவரை ஒருவர் தொடக் கண்களைப் பின் தொடர்ந்து செல்லும்போது மறைப்பதற்கென்ன உள்ளது?

மற்றவர் தானானகவே ஆகும் போதும், மிகப் பெரிய மறைபுதிராக மாறும் போதும் அறிதல் என்பது ஆழமாக ஏற்படுகிறது.