பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


விலகி ஓடுகின்றது. பள்ளத்தாக்கு உள்ள இடத்தில் அது பாய்கிறது

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள அசையும் அமைதிதான் ஒருவருக்கொருவர் கொடுக்கும் நன்கொடை அமைதியை நம்பு இணைந்து அமைதியாயிரு அது நகரும்.

5. பேரொப்புதல்

பேரன்னை தான் எல்லாவற்றின் உயிர் வாழும் படைப்புக் கலம் எல்லாவற்றிலும் அவளே உயிராக உள்ளாள்

ஏதும் செய்யாமலேயே, அவள் எல்லாவற்றையும் இருக்கச் செய்கிறாள். அவளது பெரிய கோளத்தில் (வட்டத்தில் பழுப்பு, பசுமை மற்றும் உயிர் வாழ் இனங்கள் செழிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் அறிகுறி காட்டுவது போல அவள் இதனால் ஒவ்வொன்றும் தானே இருக்கும்

‘பேரன்னையால்’ தான் ஒவ்வொன்றுக்கும் இடையே தற்போதுள்ள பிணைப்பு உள்ளது. உருண்டையாகவும், சூழ்ந்துள்ளவாறும் உள்ள 'அவள் ஒரு முழுமையான வெறுமை, இதில் தான் எல்லாமே நடைபெறுகின்றன எல்லாவற்றிலுமாயும், எங்கும் காணப்படாததுமான ‘அவள்’ எவற்றையும் ஏற்கும் பேருள்ளத்தவள்