பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


ஆணும் பெண்ணும் இழந்து கண்டு கொள்கின்றனர் - எல்லோரும் சேர்ந்திருப்பதை ஆகவே இழக்காமல் இழ, கண்டுபிடிக்காது அறிந்து கொள்

143. ஒருவர்க்கொருவர் இழந்தபோது

காதலர்கள் ஒருவருக்கொருவருள் வயமிழந்துள்ள போது, ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் தம்மை இழந்து விடுகிறார்கள். எந்தப் பெண்ணிடம் ஆண் தன்னை இழக்கிறானோ, அவள் அவளாக இருப்பதில்லை, ஏனெனில் அவள் அவனிடம் இழந்துள்ளாள். இது போலவே ஆணும் பெண்ணிடம் இழந்துள்ளான்.

இதுதான் காதலர்களிடையே உள்ள மாயை, ஆண், பெண் அவளாக இல்லாத போது பெண்ணாகவும் பெண் ஆணை அவனாக இல்லாத போது ஆணாகவும் எண்ணுகின்றனர். தான் இல்லாத போது அவள் இருப்பதாயும், தான் இல்லாத போது அவன் இருப்பதாயும் எப்படி இவர்கள் எண்ண முடியும். அவன் தானாக இல்லை என்றும், அவள் தானாக இல்லை என்பதும் எண்ணும் வரை அவன் தன்னில் இழந்தும் அவள் தன்னுள் இழந்தும் இருக்கின்றனர்.

எது இருக்கிறது. எது இல்லை என்பதில் எவ்வாறு காதலர்கள் மேலே தொடர்ந்து செல்கின்றனர்?