பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


153. கொடுத்தலும் கொள்ளலும்

ஒன்றினில் ஒன்ற நிரப்பத் துடிக்கும் ஆணின் பெரிய திண்மையும், தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பெண்ணின் உயர்ந்த மென்மையும் உள்ளன. அவளது மென்மையால் தாங்கப்படும் திண்மையும், அவனது உயர்வானதைச் சுற்றி வளைக்கும் அவளது மென்மையும் எவ்வளவு கனிவானது

கொடுத்துப் பெற்றுக் கொண்டும், ஏற்பதால் கொடுப்பதுமான அவள் ஏற்பவள். பெறுவது மூலம் கொடுத்தும், கொடுப்பதால் பெறுவதும் அவன் கொடுப்பவன்

திண்மை, மென்மை, நிரப்புதல், தக்க வைத்துக் கொள்ளல், கொடுப்பது மற்றும் ஏற்பது எல்லாமே ஆண், பெண் இருவருக்கும் ஒன்றேதான்.

154. ஒரு பெரிய பொருண்மை

கொடுப்பதும், பெறுவதும் ஒன்றாக இருக்கும் போது, அந்த ஒன்றின் பெயரென்ன? அதை வெளிப்டுத்துமாறு என்ன பெயரிடலாம்? சொற்களுக்கு அப்பாற்பட்ட அது ஏதோ ஒன்று

சொற்கள் எவ்வளவு நாள்கள் இதைப் பின் தொடரும்? முயலும் சொற்கள் இன்னும் பல சொற்களை