பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



132 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


காதலர்களையும், நம்மையும் எல்லாவற்றையுமே சூழ்ந்து கொள்கிறது

வெறுமையிலிருந்து தான் முழுமை உருவாகிறது வெறுமை இல்லையேல் முழுமையும் இல்லை.

வெறுமையிலிருந்துதான் எல்லாமே உருவாகிறது இதில்தான் எல்லாமே திரும்பி வருகின்றன

157. வெறுமையிலிருந்து தொடங்கு

மனத்தின் எண்ணங்களால் உருவான சொற்களும், கருத்துகளும்தான் ஆண், பெண் மனம் கண்டு பிடிப்பதைத்தான் எண்ணங்கள் உறுதி செய்கின்றன ஆனால் மனத்தின் புரிந்து கொள்ளும் திறன் தாங்க முடியாத அளவில் சிந்தனைகளுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று ஆண், பெண் இருவரிடையே உள்ளது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ளதைத் தாங்க, வெறுமையிலிருந்து தொடங்கு. இழப்பினால், கண்டு பிடிக்கலாம். வெறுமையாக்குவதால நிரப்புதல் உண்டு. எல்லாவற்றையும் தாங்கும் உருவம்தான் வெறுமை.

நீரில் மீன் நீந்துவது போல, வானில் பறவைகள் பறப்பது போல, மனம் வெறுமையினுள் எண்ணுகிறது

எல்லாவற்றையும் மற. எண்ணிச் சமன் செய்ய