பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 133


எந்த எண்ணமும் இல்லாது, மனம் உருவமின்றி, வெறுமையாக இருக்கட்டும். கடல் மீனை நீந்த அனுமதிப்பது போல, காற்று முகில்களை இயங்கச் செய்வது போல..

மனத்திற்கப்பால் வழக்கமான வெறுமை மனதிற்குள் வழக்கமான முழுமை.

158. ஆற்றினை வற்றச் செய்யாத போது

ஆறு கடலில் கலந்தாலும், கடல் நிரம்புவதில்லை, ஆறும் வற்றுவதில்லை.

ஓடும் தண்ணீர் ஆற்றினை வற்றச் செய்யாத போது அங்கு வெறுமை என்பது ஏது? ஆற்று நீர் கடலை நிரப்பாத போது, வெற்றிடம் எப்படி உருவாகும்?

சொற்கள் எனும் ஆற்றினுள்ளும், எண்ணங்கள் என்ற கடலினுள்ளும், பெயரிட முடியாது ஏதோ ஒன்று உள்ளது. எல்லா எண்ணங்களும் வெறுமையாகி நிலையான ஏதோ ஒன்றை நிரப்புகிறது

ஒருவருக்கொருவருள் பாய்ந்து, ஒருவரை ஒருவர் பெற்றுக் கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்கும் நிரப்புதல், வெறுமையாக்கல் என்ற நிலையான எண்ணத்தில் எவ்வளவு உள்ளது