பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


யாக்குகிறாள். அதே உலகம் இறப்பில் வெறுமையாகிறது. வெறுமை ஆக்குவதால் நிரப்புதலும், நிரப்புதலால் வெறுமை ஆவதும் உண்டாகின்றன. இது ஒரு முடிவில்லாத் தொடக்கம் இதில் இழப்போ ஆக்கமோ இல்லை

பெண் எடுத்துக் கொள்ளல், கொடுத்தல் என்ற சீரான மூச்சில் பெருமையும், சிறுமையும் அடைகிறாள் ஆண் தனது உயிர்ப்பினால் உந்தப்பட்டு அவளது மூச்சில் துணை போகும் ஒருவன்.

179. வெறுமைக்குக் காத்திருத்தல்

தன் முழுமையால் ஆண், பெண்ணை நிறைவு செய்யவில்லை என்றால், அவனுக்காக அவளின் வெறுமை காத்திருக்கின்றது. மீண்டும் அவளை நிறைவு செய்யவில்லை எனில், அவள் நிறைவு செய்யாமையை நினைவூட்டிக் காத்திருப்பாள்

பெண் ஆணை ஏற்றுத் தன் வெறுமையால் அவனை வெறுமையாக்க வில்லையானால், அவள் எப்பொழுதும் முழுமையை எழுப்பக் காத்திருக்கிறாள் மீண்டும் வெறுமையை வெறுமையாக்க வில்லை யானால் அவன் நிறைவு செய்யத் திரும்பவும் காத்திருக்கிறான். வெறுமை மாபெரும் முழுமையின் எழுச்சியை வெல்ல முடியாது.