பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變153


186. பழமையான அடியிடு

இது வரை செய்யாததைச் செய்ய விரும்புவதை செய்து விடு. மென்மையாக, முழுமையாக, வெறுமை செய் ஒருவருக்கொருவரின் மாயங்களில் நுழை

எண்ணற்ற பலரும் வழக்கமல்லாத வழக்கத்தைக் கடைபிடித்து ஒன்று சேர்ந்துள்ளனர் நம் முன்னோர்கள் எல்லோருமே நம்மை இப்போதைக்கு முன்னேற்பாடு செய்து வந்திருக்கின்றனர்

இரு உடல்களுடன் பழமையான நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கூத்தாடு

187. உடலே அறியும்

ஆணின் முழுமையை ஒரு பெண் ஏற்றுக் கொள்ளும் போது, அவன் ஒரு மறைபுதிர் மாந்தனாக இல்லை பெண்ணின் வெறுமையை ஓர் ஆண் நிரப்பும் போது, அவளும் மறைபுதிரில்லை இருவரும் சேர்ந்து மற்றுமொரு மறைபுதிராய் உள்ளனர்

ஆணையும், பெண்ணையும் பிரிக்க முற்படு, ஒன்றுதல் அறியப்படாது.

ஒன்றுதல் என்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது நிழல்கள் போல, சொற்கள் எண்ணங்களைத் தொடர்கின்றன, எண்ணங்கள் மனத்தைப் பின் தொடர,