பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 163


வழிதான். இந்த உண்மை எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.

மனத்தைத் தாண்டிச் செல்வதை எப்படி மனம் அறிகிறதோ, அப்படியே உடலைத் தாண்டிச் செல்வதை உடலும் அறிகிறது. வலிகளையும், தேவைகளையும் உணர்ந்து கொள்கிற மனத்துக்கு எவ்வாறு மனத்தின் எல்லையைத் தாண்ட வழி தெரியுமோ, அதே போல் உடலின் எல்லையைத் தாண்ட உடலுக்கும் வழி தெரியும்.

தான், மற்றவர், உள், வெளி, மனம் சிந்திக்காமல் இருக்கும் நிலையில் எண்ணுதல், இவற்றை யார் தான் வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடியும்? தொடுதல் என்து சிந்தித்தல் என்று கொள்வோமேயானால், அது தொடுதலின்றி வேறில்லை. எந்த வகையான உணர்வு மில்லாமல் நடனமாடிக் கொண்டிருப்பது தான் உடல். முடிவில் உடல் என்று கூட ஒன்றில்லை. தெரிந்து கொள்ள பணிந்துபோ, கண்டு பிடிக்க இழந்திடு வெறும் உடல் இதற்கெல்லாம் போதுமானது.

200. உடல் நினைப்பதை மனம் தொடர்கிறது

என்ன செய்ய வேண்டும் என்பதை உடல் நன்கறியும். ஏற்கெனவே அறிந்திருந்ததைப் புரிந்து கொள்வதற்காகப் புதிது புதிதான படைத்துக்