பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 167


காத்திருக்கிறது, நகர்கிறது, உணர்ச்சி ஊட்டுகிறது. முடிவில் நிறைவேற்றியும் வைக்கிறது.

ஆண்டின் ஒத்திசைவு இலையுதிர் காலத்தின் முடிவுக்கு காதலர்களை இட்டுச் செல்வதான வாக்குறுதி யாகிறது. இலையுதிர் காலத்தில் அவர்கள் ஒருங்கிணைவது புதியதோர் தொடக்கத்தின் ஒத்திசைவு உணர்ச்சிப் பெருக்கின் ஆழத்தில், சொல்லப்படாத வாக்குறுதியாகக் கூட அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், பொறுத்திருக்கிறார்கள். பனிக்காலம் வரை காத்திருப்ப தென்பது கூட வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையினால்தான். பனிக்காலம் பற்றிய எண்ணமும், மறுபடி மறுபடி ஆர்வம் ஊற்றெடுத்து வரப் போகிற பருவ நிலைகளிலும் தொடரும் என்கிற நம்பிக்கையில் தான் எழுகிறது.

204. உடலின் செய்பாடு

ஆணின் முழுமை பெண்ணின் வெறுமையினாலும், பெண்ணின் வெறுமை ஆணின் முழுமையினாலும் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், ஆண் பெண் என்கிற தனி நிலை மட்டும் இருப்பதில்லை. உடலின் செய்கையினால் இரு பாலாரின் நிலையிலும் மாற்றமும், இணைவும் ஏற்படுகின்றன.

தசைத் தொடர்புடையது என்கிற காரணத்தினால் ஆண் மனம், பெண் மனம் என்கிற புரிதல் ஏற்படுகிறது