பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



168 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


எண்ணங்களைப் பற்றிய சிந்தனை மூலம் இந்தப் புரிதல் கிடைப்பதில்லை.

தசை உணர்ச்சி காரணமாக உடலுக்கு விரைவில் புரிதல் கிடைக்கிறது. உடல் புரிதலைப் பெற முயச்சி செய்கிறது எண்ணங்கள் புரிதலைப் பெற உடலைப் பின் தொடர்கின்றன

205. எளிமையும் தெளிவும்

தெளிவாகப் புலப்படுவதிலும் தெளிவில்லாத தொன்று உள்ளது. எளிதுதான் என்பதில் எளிதில்லாத தொன்று உள்ளது தெளிவானது, எளிதானது என்று நாம் நினைப்பதிலெல்லாம் தெளிவில்லாததும், எளிதில்லாததும் உள்ளன.

ஆண், பெண்ணும் நன்கு ஆழ்வுணர்வின் போது, உடலோடு உடல் இணைதல் என்ற நிலைக்கும் அப்பால் ஒன்று இருக்கிறது. இடைவெளி என்பதற்கு உள்ளேயே, உன்னையும், வெளியையும் இங்கே அங்கே, இது அது இவற்றையெல்லாம் இணைப்பது என்று ஒன்று இருக்கிறது

இடைவெளி, என்பதற்கு உள்ளேயே, எளிமையானது எளிமையற்றது நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலை, முழுமையான வெறுமை, எண்ணம் பொருள் இரண்டும் அற்ற ஒருநிலை, தொடாமலே தொடுதல் என்கிற நிலை ஆகியவையெல்லாம் காணப்