பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


14. எளிமையின் பெருமை

தொடக்கம் சிக்கலானதாகத் தோன்றினாலும், தொடக்கத்தின் முதற்படி எளிதே எளிதான தொடக்கத்தைக் கண்டுகொள் எளிமையிலிருந்துதான் மிகவும் உயாந்தது தோன்றுகிறது உயர்ந்ததின் மையத்தில்தான் சிறியது உள்ளது எளிமையின் பெருமையைக் கண்டு கொள்

போலிமை, புகழ்ச்சியணி ஆகியவற்றிடம் கவனமாயிரு இன்றியமையாமையை நாடும் போது, எளிமையைப் பின்பற்று பெரியது சிக்கலானதன்று எளிமையை நம்பு இதிலிருந்து இணக்கமும், ஒற்றுமையும உருவாகிறது மிகக் குறைந்ததிலேயே பெருந்தனமை காணக் கிடைக்கிறது

15. வழக்கத்திற்குத் திரும்பல்

பொதுவான மறைபுதிரை நெருங்கி வா வழக்கமானவற்றைக் கவனி காண்பதற்கு வேறு எதுவும் இல்லை அலைபாயும் எண்ணங்கள் தொடக்க நிலைக்குத் திரும்பித் தெளிவடைகின்றன பொதுவான வற்றை வியப்பாக அறிவுதான் அறிகிறது