பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 21


அதற்குப் பெயரிட்டுச் சொற்களின் வலையில் இழ வெளிப்படையான வினாவின் மூலம் அமைதியான விடையை வெளிப்படுத்து

22. தெளிவானது

இயற்கையைப் போல, அகன்ற அதை இழக்க முடியாது. காணமுடியாதபடி அவ்வளவு குறுகலானது ஏமாற்றக் கூடிய அளவில் தெளிவானது

அடங்கிப் போவதால் இசைவு உண்டாகும் போதும், வெற்றி கொள்வதால் அமைதி உண்டாகும் போதும், பேசாமையின் போது சும்மா இருக்கும் போதும் அது அங்கே இருக்கிறது

போராடும் போது அது போய் விடுகிறது எடுக்கும் போது இழக்கப்படுகிறது. பெற்றுக் கொள்ளும் போது கொடுக்கப்படுகிறது, வெறுமையாயிருக்கும் போது நிரப்பப்படுகிறது

23. தொடக்கத்திற்குப் பயணம்

வழக்கமானதைக் கண்டுபிடிக்க வழக்கமானதை இழ. வழக்கத்தின் மதிப்பை வழக்கமின்மை உறுதிப்படுத்துகிறது படிக்கப்பட்டதை முழுமையாக அறியத் தெரிந்ததை விட்டு விடு. நமது எல்லா ஓட்டங்களும்