பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


அறிந்ததற்கப்பால் அறிந்திராததை நோக்கி மயக்கும் முதற்தொடக்கம்.

அறிவுள்ளபோது, அறியாததால்"இயற்கை நெறி"யைக் காண முடியும்

40. பிரிக்கப் படாத முழுமை

பெயர் இருப்பதால், பிரிக்கப்படுகிறது ஒருவர் மற்றவரைப் பின் பற்றுவதால், பிரிந்த பின் அங்கே முழுமைதான்.

ஆதலால், முழுமை தொடர்ந்திருக்க, பெயரிட்டுப் பிரி பெண்ணைப் பெண்ணெனப் பெயரிட்டு, அவளை ஆணிடமிருந்து பிரி. ஆணை ஆண் எனக் கூப்பிட்டுப் பெண்ணிடமிருந்து பிரித்து விடு. பெயரிடல், பிரித்தல் இவற்றுக்கு அப்பால், முழுமையையும் பிரிக்கப்படாத அமைதியையும் காண்

41. துயர்க்கேடு

ஒருவருக்கொருவர் தேடிக் கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் எவ்விதம் அமைதியாய் இருக்கக் கூடும்? இது போன்ற ஒரு கொள்கைப் பிடிப்பும். ஒவ்வொரு பார்வையும் தேடுகிறது. அனைத்து உலகமே ஒரே தேவையை நோக்கித் திருப்பி விடப்படுகிறது வயிற்றுக் கீழே பசி, நெஞ்சம் வெறுமையாக,