பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


எப்போதும் ஆண் வெறுமையில் வைக்கப் படுகிறான் அவன் விருப்பப்படி செய்யட்டும், எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் பேரன்னையின் தழுவலில் இருந்து விடுபட முடியாது

46. அவளின் அணைப்பில்

வட்ட வடிவமாயும், ஏராளமாயும் அவள் இருப்பின் வளைவு, வாக்குறுதியின் ஆழம், உணவூட்ட வளர்ச்சி அவள் நிலத்தாய், அறிவுத்தாய், கொடுப்பவள், ஊட்டி வளர்ப்பவள். நிறைவு அளிப்பவள்.

கடினமான, அரிதாயுள்ள அவன் பலத்தின் எழுச்சி தேட அடையும் போராட்டத்தின் உரு. அவன் மலை போன்ற மாந்தன், அறிவு செயல்பட்டு, அசைந்து, எடுத்துக் கொண்டும், உருவாக்குவதும் அவனே

நிலத்தில் இருந்து மலை கிளைத்தல் போல, பெண்ணிலிருந்து ஆண் தோன்றுகிறான். எல்லாமே பேரன்னையிடமிருந்து வருகின்றன. இதில்தான் ஆண் குழந்தை போல அவளின் மடியில் அவளது அணைப்பில் தீவிரமாக விளையாடுகிறான்

47. ஒருவர்க்கொருவர் இணைப்பு

கருத்து என்ற காற்றினில் மிதந்து எண்ணம் என்ற மெல்லிய காற்றில் கரைந்து விடு. அப்போது தசை