பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


யுடன் தொடர்புபட்ட உடலும் தசையும் மண்ணிலிருந்து எங்கிருந்து வருகிறது?.

நிலத்தைத் தொடு அதன் மணத்தை முகர் அதனின் மணத்தைச் சுவை ஆணும் பெண்ணும் நிலத்துடன் ஒருவருக்கொருவர் இணைந்துள்ளனர்.

48. சொற்களின் வேரும் தண்டும்

சுற்றியுள்ள காற்றில் மரம் உருவாகிறது. வானம் அதைச்சுற்றி வளைக்கிறது. அதன் வேர்கள் பிடிப்புள்ள மண்ணில் இறங்குகிறது நிலம் அவற்றை உணவூட்டி வளர்க்கிறது இந்த இணைப்பில் அசைவு இருக்கிறது இதில்தான் அடிப்படை ஆண் பெண் இருவரின் தழுவலும் உள்ளது.

அவர்களது கூட்டுறவு சொற்களால் இல்லை ஏனெனில் அவர்கள் அசைவும் அமைதியும், கொடுப்பதும் வாங்குவதும், வெளிப்புறமும் உள்புறமும் வன்மையும் மென்மையும், பிடித்துக் கொள்ளலும் விட்டுக் கொடுப்பதும் இவற்றின் உடனடியினால் பற்றிக் கொள்வதில்லை

சொற்களின் வேர்களும் தண்டும், மண்ணின் முழுமையும் காற்றின் வெறுமையும் இவற்றிற்கிடையே