பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 41


மேலும் கீழும் தேடுகின்றன. எண்ணங்கள் உதித்து சொற்களாக வெளி வருகின்றன, அது சமயம் பேரன்னையின் அமைதியான தழுவலில் அறிவு உள்ளது.

49. பொதுவானளாக இல்லாதவள்

ஆண் என்ற மாந்தன் தசை பேரன்னையின் முழுமையில் வெறுமையில் சிறியது பெண் என்ற தசை வெறுமையைக் கொண்டுள்ளது. இது பேரன்னையின் முழுமையான வெறுமையையும் தன்னிடம் வளைத்துக் கொள்ளத் திறக்கிறது

போராடும் ஆண் தான் பேரன்னையை மாற்றி நிரப்ப முயலுகிறான். தன் பிடிப்புள்ள பெண்தான் பேரன்னையைத் தழுவ முயலுகிறாள்

இதனால்தான் பொது மாந்தனுக்கு நளிமாகவும், உள்ளீட்டை இழக்கவும், தழுவவும் கடினமானது இதுதான் பொதுவானவனாக இல்லாதவன் ஒரு மாந்தனை விட உயர்ந்தவனாகிறான்.

50. வேலை பயில்பவன்

வேலை கற்றுக் கொள்பவன் மரத்தை வெட்ட அது துண்டு துண்டாகச் சிதறுகிறது கை தேர்ந்த சிற்பி மென்மையாகத் தொட மரம் அவனுக்கிசைய நல்ல முறையில் கலை உயிர் பெறுகிறது