பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 45


கூட்டுறவை விட உயர்ந்தது எது? ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் முழுமை ஆக்குகின்றனர் ஒவ்வொருவரும் ஆண் அல்லது பெண் இவர்களை விடப் பெரியவராகத் தோன்றும் அளவில் ஒவ்வொரு வரும் தன்னை இழந்து விடுகின்றனர் உள்ளும், வெளியும் போய் விடுகின்றன தானும் தான் என்பதும் தீர்ந்து விடுகிறது இருவராக இருந்து கொண்டு இருவருமே ஒன்றாகிவிடுகின்றனர்

56. இடையில் செல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளதை நம்பு அது இருந்தால் போதும், ஆணை இடப்பட மாட்டாது. அழைத்தாலும் அது வராது

ஆசை தேவை, எண்ணம், எதுமின்றி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளதில் செல். அங்கு அமைதியாய் இருக்கும்போது, மென்மையாகத் திறந்து அடிப்படைத் தூண்டுதல் தேவையால் எடுத்துச் செல்

57. இயற்கைநெறி இருக்கையில்

சிறு துளித் தண்ணீர் விடப்பட்டு ஆறாக ஓடும போது, இயற்கைநெறி இருக்கிறது இளவேனில் மொட்டு விரியும் போதும், இலை உதிர்கால இலை விழும்போதும் இயற்கை இருக்கிறது