பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஆண் பெண் அன்புறவு செம்புலப் பெயல் நீர்போலத் தாம் கலக்கின்றன. காதலர்கள் கணவன் மனைவியர் ஆகின்றனர். ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். வாழ்வின் இரு சிறகுகள் ஆகி நம்பிக்கையை வேரும் விழுதுமாகப் பெறுகின்றனர். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என உழைக்கின்றனர் - உயர்கின்றனர். உலகை வாழ்விக்கப் பிறந்த ஆண் பெண்ணின் அன்புறவு இதுதான். சமூகத்தின் அங்கம் இவர்கள். நாட்டின் உலகின் உறுப்பினர்கள் இவர்கள். இவர்கள் வாழ்வின் வழிகாட்டி இயற்கையும் இயற்கை நெறிகளும்தான்.

ஆண் பெண் அன்புறவு வாழ்க்கையைத் தமிழிலக்கியம் அகம் என்று பேசும் பாடும் கூத்திடும். சங்ககால ஐந்திணை அகப் பாடல்களைப் போல உலகில் எம் மொழியிலும் 2000 ஆண்டுகட்கு முன்னர் காணவே முடியாது. சீன ஜப்பான் தனிப் பாடல்கள் பத்து விழுக்காடு சற்றே நெருங்கி வரக் கூடும். அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய முப்பாலில் மூன்றாம் பாலான காமத்துப்பால் பாடல்கள் ஆண் - பெண் காதலின்ப உறவுகளைப் புல்லை வயப்பாக்கும் பனித்துளியில் செங்கதிரையே காட்டுவது போல ஆண் பெண் - தோழமையை - அன்பைக் காதலைக் காட்டும் வாழ்க்கைக் கண்ணாடி எம் மொழியிலும் இல்லை.

பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டில் ‘காதலில் சிறந்த காதற் காமத்தைப் பல மொழிகளும் கவிஞர்கள் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து