பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


இரண்டையும், இரண்டாக இருக்கும்போது ஒன்றையும் பயன்படுத்து.

மனத்தின் வினாக்கள் சொற்களுடன் விளையாடுகின்றன நேராக எண்ணுவதில் ஒரே மனத்தில் இருப்பதுதான் குழப்பம். இயற்கையின் நேர்மையில்லாத முறுக்கிய வளைந்த வழிகள் எண்ணத்திற்கு ஒவ்வாது

கேட்க வினாக்கள் இல்லை, ஆகவே வினவாதே. சொல்ல விடைகள் இல்லை, ஆக விடையளிக்காதே. வினாக்கள், விடைகள் இல்லாமல் விளையாடு.

83. நேரிய மனம்

இணைந்திருப்பதன் முழுமையை ஒரே ஒரு மனம் மட்டும் புரிந்து கொள்ளாது. பிரிவின் முழுமையையும் இரு மனங்கள் ஒன்றாக இருந்தும் அறியா.

ஒரு மனம், இரு மனங்கள், பல மனங்கள் தேவையாகின்றன. ஒவ்வொன்றும் புரிந்து கொள்ள நேர்மனம் தேவை

முழுமனமும் மனமின்மையும் எங்கே?

84. ஒவ்வொருவரிலும் இருவர்

ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து தனிமையில்