பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


முதல் வாழ்க்கைத் துணையாகக் கொள்வது எவ்வளவு வழக்கமானது! மற்றவரை அறிந்து கொள்வதற்கு வழி தன்னைத் தானே கண்டு கொள்வது எவ்வளவு எளிது. வியப்பு நெருங்கிய பழக்கத்துடன் வளர்கிறது, அறிந்து கொள்வதுடன் கமுக்கம் வெளிப்படுகிறது, இழப்புடன் அதிகமாகிறது வரவு. இவை எல்லாம் எவ்வளவு வழக்கமானது! ஆணும் பெண்ணும் அவர்களது சேர்க்கையால் உறுதி செய்யப்பட்டும் உறுதி செய்யப்படாமலும், அழிக்கப்பட்டும், திரும்ப உருவாக்கப்பட்டும், இழக்கப்பட்டும், புதிதாகக் கண்டு பிடிக்கப்படுவது எவ்வளவு எளிமை

வழக்கமானதைக் கண்டு கொள்ள எண்ணமிடுவது பயனேதுமில்லை தெரிந்தெடுத்தல், தெரிந்தெடுக்காதது, செய்வதும், செய்யாததும், ஏன், ஏன் கூடாது என்பவை குழப்புகிற தேக்க நிலைக்கான போராட்டம்

தெளிவாயுள்ளதுதான் கமுக்கம். வழக்கமானதில் மறைந்துள்ள வழக்கமின்மைதான் வழக்கம். வழக்க மற்ற இயற்கை தான் வழக்கமான 'இயற்கை நெறி'

89. சரிசமமற்ற மனம்

பிரிவும், இணைந்திருப்பதும் ஏன் மூச்சு விடுகின்றன? ஆணும் பெண்ணும் தங்களை விட உயர்ந்த ஏதோ ஒன்றிற்காக ஏன் ஆடுகின்றனர்?