பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



78 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


காண்பதே வெளியே இருப்பதை வெளியே உள்ளது உள்ளே எடுத்துச் செல்ல, உள்ளே இருக்கும் இரண்டும் சந்திக்கின்றன.

உட்புறம் உட்புறத்தைச் சந்திக்க, அதை வெளிப்புறத்திலிருந்து பிரிப்பது அவ்வளவு கடினம்

உட்புறம், வெளிப்புறம் என்பது உண்மையிலேயே உள்ளதா? ஆழ்ந்த சந்திப்பின் எளிமையைச் சொற்கள் தான் சிக்கலாக்குகின்றன.

97. போதுமானது

எல்லா இடங்களிலும் தேடுவதற்கு மாறாக உள்ளேயே ஆழ்ந்து தேடு, இணக்கத்திலேயே தேடு.

தொடக்கம் கண்டு பிடிக்கப்படின், ஒவ்வோர் ஆண், பெண் இவர்களிடம் உள்ள மறைபுதிர் போதுமானதே

98. முயற்சியின்மை

தொடக்கத்திற்கு முன்பே இணைந்திருப்பது வந்தது. உட்புறத்தினை விட ஆழத்திலிருந்து வந்தது. அது உட்புறம், வெளிப்புறம் இரண்டையும் பொருந்துவதாகச் செய்கிறது. அது ஆண்,பெண் இருவரிடமும் உள்ள வேறுபாட்டைத் தீர்த்து வைக்கிறது.